ஷார்ஜா சஹாரா சென்டரில் தீ விபத்து! ஷார்ஜா ஆகிய எமிரேட்டுகளின் எல்லையில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற வணிக வளாகம் 'ஸஹாரா சென்டர்'. நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் அங்குள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட மின்கசிவால் திடீரென ஒரு பகுதி தீப்பற்றி எரியத் துவங்கியது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்த 2 நிமிடத்தில் அங்கு வந்த ஷார்ஜா தீயணைப்புத் துறையினர் சுமார் 10 நிமிடத்திற்குள் தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்பு 20 நிமிடங்கள் வணிக வளாகத்தை தீயின் தாக்கத்திலிருந்து குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓட்டுமொத்த தீயணைப்பு நடவடிக்கைகளும் சுமார் 30 நிமிடங்களில் முடிந்ததாக ஷார்ஜா தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த தீவிபத்தை தொடர்ந்து அனைவரும் உடனடியாக வணிக வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதங்களும், காயங்களும் யாருக்கும் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் ஸஹாரா சென்டர் விளம்பரப் பலகையில் (Sign Board) ஒன்றில் ஏற்பட்ட தீயும் உடனடியாக அணைக்கப்பட்டது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.