போலீஸ் அராஜகம்.. மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த போலீஸ்!திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி போராடிய பெண்களின் கன்னத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை எதிர்த்து போராடிய பெண்களின் மீது போலீசார் லத்தி சார்ஜ் நடத்தியதோடு கன்னத்தில் அறைந்து கொடுமையாக தாக்கியுள்ளனர். இந்த வெறித்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது
டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை முதலே அவர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடையை மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தும் கலையாததால் போலீசார் தடியடி நடத்தினர்.

இதில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களின் கன்னத்தில் போலீஸ் ஒருவர் ஓங்கி அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வெறித்தனமாக தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. போலீசாரை எதிர்த்து பலரும் முழக்கமிட்டுள்ளனர்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.