அமெரிக்காவின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி மரணம்: ஆற்றில் சடலமாக மீட்புநியூ யார்க் மாகாண உயர் நீதிமன்றத்தின் உதவி நீதிபதியாக பணியாற்றி வந்த, அமெரிக்காவின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி ஷெய்லா அப்துஸ்-சலாம் ஹூட்சன் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

நியூ யார்க் காவல்துறையின் துறைமுகப் பிரிவு காவல்துறையினர், மான்ஹட்டன் அருகே, ஹூட்சன் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த ஷெய்லாவின் உடலை கண்டெடுத்தனர்.

65 வயதான ஷெய்லா, ஆற்றில் இருந்து மீட்கப்பட்டதும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது உடலை, கணவர் அடையாளம் காட்டினார்.

ஹர்லேம் பகுதியில் வசித்து வந்த ஷெய்லா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா அல்லது விபத்தில் சிக்கினாரா என்பது குறித்து தகவல்கள் இல்லை. அவரது உடலில் எந்த காயமும் இல்லை. மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பிறகே முடிவு செய்ய முடியும்  என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் ஷெய்லா நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.