முத்துப்பேட்டை ECR யில் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்புமுத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக்ம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் மதுகடையை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் செல்லும் கிழக்கு கடற்க்கரை சாலையில் விதி முறைகளை மீறி எராளமான டாஸ்மாக் கடைகள் இருந்தாலும் இந்த சாலை ஓரத்தில் குறிப்பாக பாண்டி, எடையூர்சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோவிலூர் செம்படவன்காடு  ஆகிய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கட்டமாக போராடியும் மாவட்ட நிர்வாகம் இந்த டாஸ்மாக் கடைகளை மாற்றுவதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

இந்தநிலையில் உச்ச நீதிமன்றம் கெடு நேற்றோட முடிந்த நிலையில் தமிழக அரசு இந்த டாஸ்மாக் கடைகளை குறிப்பாக முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்த டாஸ்மாக் கடைகளை மூடுவதற்க்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை அதற்கான எந்த அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை என்று இச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த டாஸ்மாக் கடைகளை அகற்றாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.