துபாயில் தங்க நிறத்தில் தகதகக்கும் பிரேம் ( Frame ) டவர் !துபையின் ஷேக் ஜாயித் ரோட்டில் அல் ஜபீல் பார்க் ஸ்டார் கேட் அருகே துபை மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டு வரும் பிரேம் ( Frame ) டவர் பில்டிங்கின் பணிகள் நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளதுடன் அதன் இணைப்புப் பாலத்தின் கீழ் பதிக்கப்பட்டு வரும் தங்க நிற தகடுகளால் அப்பகுதியே தகதகவென மின்னுகிறது.

சுமார் 160 மில்லியன் திர்ஹம் திட்ட செலவில் 150 மீட்டர் உயரத்தில் இரட்டை கோபுரமாகவும், அகலத்தில் 93 மீட்டரிலும் இவ்விரு கோரங்களையும் இணைக்கும் பாலம் 100 மீட்டரிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த 50 மாடி கட்டிடப் பணிகள் 2013 ஆம் ஆண்டு கட்டத் துவக்கப்பட்டு தற்போது இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இணைப்பு பாலத்திலிருந்து துபையின் அழகை கண்டு ரசிக்கவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தரை தளத்தில் பழைய துபை குறித்த நவீன கண்காட்சி அரங்குகள் அமையவுள்ளன.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.