ராமர் கோவிலை எதிர்த்தால் தலை துண்டிக்கப்படும் என கூறிய பாஜக MLAராமர் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் தலை துண்டிக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் MLA ஒருவா் மிரட்டல் விடுத்திருப்பதால் சர்ச்சை வெடித்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த ராஜா சிங் என்ற பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர், ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் மேற்கண்ட சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.  அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்ததில் இருந்தே, அக்கட்சியனரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் எல்லை மீறும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளன. இதுபற்றி பேசிய மஜ்லிஸ் பாச்சாவோ தெஹ்ரீக் கட்சியை சேர்ந்த அம்ஜாதுல்லா கான், உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள் அத்துமீறி செயல்பட்டு வருவதாக சாடினார். ராஜாசிங்கின் பேச்சு உச்சநீதிமன்ற நடவடிக்கையை அவமதிக்கும் செயலாக உள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தார். இஸ்லாமியர்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து தான் இருக்கிறார்கள் என்றார்.

ஐதராபாத்தில் உள்ள கோஷாமஹால் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள MLA ராஜாசிங், அடிக்கடி சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறி கைதானவர் ஆவார். தற்போது அவர் கூறியுள்ள இந்த கருத்தும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மத உணர்வுகளை தூண்டும் வகையிலும் இருப்பதாக கூறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.