குஜராத் கலவரம்: பல்கிஸ்,கவுசர் பானு கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்திற்காக 11 பேருக்கு ஆயுள் தண்டனைபெண்களை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை வழங்க முடியாது! மும்பை நீதிமன்றம் தீர்ப்பு!

குஜராத்தில் சங்பரிவார் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர படுகொலைகளின் ஒன்றான பல்கிஸ் பானு குடும்பத்தார் கொலை வழக்கில் - 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அப்போது பல்கிஸ் கர்ப்பமாக இருந்தார். அவளின் கண் முன்னே 3 வயது குழந்தையை கல்லால் அடித்துக் கொலை செய்தார்கள் வெறியர்கள். பிறகு அவளை கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தார்கள் மதவெறிக் கும்பல்.

எந்த மனிதனும் ஏற்க முடியாத வன்முறைக் கொடூரம் அது. பல பெண்களை கற்பழித்து அவர்களின் பிறப்புருப்பில் மரகட்டையால் ஆப்பு அடித்து துடிக்க துடிக்க எரித்து கொலை செய்தார்கள்.. கவுசர் பானு என்ற 9 மாத கற்பினி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை வெளியே எடுத்து தீயில் பொசுக்கினார்கள்

இந்த வழக்கின் சாட்சிகளை கலைக்க இணப்படுகொலையின் ‘மாதிரி மாநிலமான’ குஜராத்தின் காவலர்களும் மருத்துவர்களும் முயன்றதால் - வேறு மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரித்தது.
இத்தனை ஆண்டுகளுக்கு பின், தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் சாட்சியத்தை சிதைக்க முயன்ற மருத்துவர்கள், போலீஸ்காரர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எத்தனை கொடும் பயங்கரவாதிகள் அவர்கள் என்பதையும், நீண்டதொரு போராட்டம் நடத்தவேண்டிய தேவையையும் இந்த வழக்கு இந்தியனாக பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துக் காட்டுகிறது. குஜராத் இணப்படுகொலை இந்தியாவின் மறக்கமுடியாத ஆராதரணம் என்பது மட்டும் உண்மை!

கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள் எல்லாம் நாட்டின் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை....
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.