தமனிகளை சுத்தமாக்க தினமும் சாப்பிட வேண்டிய 12 சிறந்த உணவுகள்!இன்றைய கால கட்டத்தில் கார்டிவாஸ்குலர் போன்ற இதய நோய்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது அடைபட்ட தமனிகள் ஆகும்.

இந்த இரத்த நாளங்களின் பங்கு என்னவென்றால், இதயத்தில் இருந்து உடலின் பிற பாகங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லவதாகும். இது ஆரோக்கியமாக உள்ள போது, விரிவானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும்.
இது கொழுப்பு மற்றும் பிற பொருட்களின் குவிப்பு காரணமாக தடிப்பு மற்றும் கடினத்தன்மை அடைந்து, அழற்சி ஏற்படுகிறது. இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

தமனிகளின் அடைப்பானது ஒரு நீண்ட கால செயல்முறை ஆகும். இது படிப்படியாக உருவாகிறது. பெரும்பாலும் கெட்ட உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுகிறது.
இருப்பினும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இத்தகைய சிக்கல்களை தடுக்கலாம். இதோ உங்கள் தமனிகளை சுத்தமாக வைத்திருக்க இந்த 12 உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ப்ரோக்கோலி:
ப்ரோக்கோலியில் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. இது தமனிகளின் கடினப்படுத்துதலை தடுக்கிறது.
இந்த காய்கறியில் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இது ஆக்சிஜனேற்றத்துக்கு எதிரான எல்டிஎல் கொழுப்பு மற்றும் இதயத்தின் நிலை தீவிரமடைவதில் இருந்து தடுக்கிறது.
இதில் உள்ள நார்ச்சத்து, மன அழுத்தத்தை குறைக்கிறது, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இருதய வால்வுகளை ஆரோக்கியமாக இயங்க செய்கிறது.


க்ரீன் டீ!
க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் செரிமானத்தின் போது கொழுப்பு உறிஞ்சுதலை தடுக்கின்றன.
எனவே, தினமும் 1-2 கப் க்ரீன் டீ குடிக்க வேண்டும். இது இரத்த லிப்பிட் அளவை மேம்படுத்தவும், தமனியில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும் உதவுகிறது. இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் தூண்டி உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.


ஆளி விதைகள்!
ஆளிவிதையில் அதிக அளவு அல்பா- லினோலெனிக் அமிலம் (ALA) உள்ளது. இது இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. மேலும் தமனிகளை சுத்தமாக வைக்கிறது.

கீரை!
கீரையில் ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது மற்றும் இது பல ஆரோக்கியமான பலன்களை வழங்குகிறது. இதில் நைட்ரிக் ஆக்சைடு அதிகமாக உள்ளது. இது தமனிகள், இரத்தக் குழாய்களில் அடைப்பு மற்றும் சுருக்கங்களைத் தடுக்கிறது. இதனால் பக்கவாதம் மற்றும் இதயத் நோய் தாக்குதல்கள் போன்ற ஆபத்துகள் குறைக்கிறது.
கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற ஊட்டச்சத்து மருத்துவ ஆராய்ச்சி, 7 நாட்கள் தொடர்ந்து கீரை உட்கொள்வதால் தமனிகளில் ஏற்படும் விரைப்பு தன்மை குறைவதாக தெரிவித்துள்ளது.
இதில் உள்ள விட்டமின் சி மற்றும் ஏ கெட்ட கொழுப்புகளிடம் இருந்து இதயத்தின் வால்வுகளை காக்கிறது. இதனால் தமனிகள் தடிக்கும் ஆபத்து குறைகிறது. இதில் பொட்டாசியம் மற்றும் போலிக் ஆசிட் நிறைந்துள்ளதால், இது கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
எனவே தினமுன் நீங்கள் அரை கப் அளவு கீரை சாப்பிடுவது சிறந்தது. இதனை ஜீஸ், சூப், மற்றும் சாலட்டுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

மாதுளை:
மாதுளையில் ஆன்டிஆக்சிடண்ட் அதிக அளவு உள்ளதால் தமனிகள் சேதமாவது குறைக்கப்படுகிறது. மேலும் இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைகிறது.
2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வானது, மூன்று ஆண்கள் தொடர்ந்து மாதுளை சாறு பருகியவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைந்து, இருதய நோய்கள் குணமானதாக கூறுகிறது.
2013 ஆம் ஆண்டு ஆய்வின் படி மாதுளை சாப்பிடுவதால், இருதய அடைப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பிரச்சனை குறைவதாக கூறுகிறது.
நீங்கள் ஒரு நாளைக்கு 1-2 மாதுளை சாப்பிடலாம். அல்லது புதிதாக தயாரிக்கப்பட்ட மாதுளை சாறு ஒரு கிளாஸ் குடிக்கலாம்.


க்ரான்பெரீஸ்(Cranberries):
இதில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகமாக உள்ளன. இதனால் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. இவை எல்டிஎல் அளவை குறைத்து HDL கொழுப்பு அளவுகளை அதிகரிக்கின்றன. இதன் ஜீஸ் மற்ற பழங்களை காட்டிலும், அதிக அளவு சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
நீங்கள் தினமும் இயற்கையான க்ரான்பெரீஸ் ஜீஸை குடிப்பதால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் இருதய நோய்களில் இருந்து தப்பிக்க முடிகிறது.


அவோகாடா (Avocados)!
ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அவோகாடோக்களில் அதிக அளவு உள்ளன. அவை எல்டிஎல் குறைத்து HDL அளவுகளை அதிகரிக்கின்றன. உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL), அல்லது நல்ல கொழுப்பு, தமனிகளின் தடுக்கிறது.
1996 ஆம் ஆண்டு ஆய்வின் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவுகள், இந்த பழங்களில் அதிகமான உள்ள கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமானவையாகவும், குறிப்பாக மிதமான ஹைபர்கோலெஸ்டெல்லோலிமிக் நோயாளிகளுக்கு சிறந்ததாகவும், மேலும் ஹைபர்டிரிகிளிச்டிரிமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட, நோயை குறைப்பதாக தெரிவித்துள்ளது.
வைட்டமின் ஈ, கொலஸ்ட்ரால் ஆக்ஸிஜனேற்றத்திற்கு எதிராக செயல்படுகிறது. இரத்த ஓட்டத்தில் தீங்கு விளைவிக்கும் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கும் ஃபோலேட் இதில் அதிகமாக உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
நீங்கள் தினமும் பாதி அளவு அவோகாடா (Avocados) சாப்பிடலாம். இதனை ரொட்டியில் வெண்ணெய்க்கு பதிலாக உபயோகப்படுத்தலாம்.


அஸ்பாரகஸ் (Asparagus)
இது இயற்கையாகவே தமனியில் இரத்தம் உறைவதை தடுக்கிறது. B வைட்டமின்கள், குறிப்பாக B6, ஹோமோசிஸ்டீனைக் குறைக்கிறது. மேலும், இது தமனியில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. இதனை நீங்கள் தினமும் சைட் டிஸ்ஸாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


மஞ்சள்!
மஞ்சளில் உள்ள மூலப்பொருள்கள், சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளன. இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இது இதயத்தின் அமைப்பை பலப்படுத்துகிறது மற்றும் தமனிகளின் அடைப்புக்களை குறைக்கவும் பயன்படுகிறது.
மேலும், இது எல்டிஎல் அல்லது 'கெட்ட' கொழுப்பு அளவைக் குறைக்கிறது. இதனால் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. மருத்துவ மற்றும் பரிசோதனை பற்றிய சர்வதேச இதழில் வெளியான ஒரு 2015 ஆய்வின் கண்டுபிடிப்புகள், மஞ்சள் தமனிகள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன எனவும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாக்கவும், அலர்ஜி ஏற்படுவதை தடுக்கவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகின்றன எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
சிறிதளவு மஞ்சளை பாலில் இட்டு தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்கலாம்.

ஆப்பிள்!
ஆப்பிள் ஒரு குறிப்பிட்ட வகை நார்ச்சத்து நிறைந்ததாகும். இது இரத்த ஓட்டத்தில் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. பித்த அமிலங்களை குடல் உறிஞ்சுதலை தடுக்கிறது. இது கல்லீரல் ஆரோக்கியத்தினை பாதுகாக்கிறது. மேலும் இருதய சமந்தப்பட்ட நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது.
ஆப்பிளை தினமும் தோலுடன் சாப்பிட்டு வந்தால் அதன் முழு பலனையும் பெறலாம்.

பூண்டு!
பூண்டு அதிக அளவு ஆரோக்கியத்தை உடலுக்கு தருகிறது. இது தமனியில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்கிறது. தமனி அதிக அளவு சேதமாவதை தடுக்கிறது.
இதை உணவில் சேர்பதை வழக்கப்படுத்திக் கொண்டால், இரத்தத்தில் எல்டிஎல் கொழுப்பு அளவைக் குறைக்க முடியும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பெருங்குடலின் கடின தன்மையை தடுக்கிறது, மற்றும் இரத்த நாளங்களை பாதுகாக்கிறது.
நீங்கள் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டை தினமும் காலையில் உண்ணலாம். அல்லது சூப் மற்றும் பிற உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.


சியா விதைகள்!
சியா விதைகள் பாரம்பரியமாக மாயன் மற்றும் ஆஸ்டெக் கலாச்சாரங்களில் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை சுகாதார நலன்கள் பலவற்றை தருகின்றன.
இந்த ஆலை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது, மேலும் இது ஃபைபர் நிறைந்ததாகவும், கெட்ட கொலஸ்டிரால் குறைப்பதற்கும், இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும், தமனிகளை சுத்தம் செய்வதற்கும் சிறந்தது.

நீங்கள் பல வழிகளில் சியா விதைகளை சாப்பிடலாம். ஓட்மீல் மற்றும் தயிர் மீது உலர்ந்த விதைகளை இட்டு சாப்பிடலாம் அல்லது சாலடுகளில் சேர்க்கலாம். சியா விதைகளை சாப்பிடும் முன் அது நீரை அதிக அளவில் உறிஞ்சும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.