வெறும் 12 ரூபாயில் விமானப் பயணம்.. மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்த ஸ்பைஸ்ஜெட்..!இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது, இதற்கு ஏற்றார்போல் மத்திய அரசும் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களை விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கும் பணிகளைச் செய்து வருகிறது.

இந்நிலையில் நாட்டின் முன்னணி மலிவுவிலை பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் anniversary saleஆக வெறும் 12 என்ற அடிப்படை கட்டணம் கொண்ட மலிவு விலையில் டிக்கெட்-ஐ விற்பனை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இத்துறை நிறுவனங்களின் தூக்கத்தைக் கெடுத்தது..

போட்டி
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 12 ரூபாய் டிக்கெட் அறிவிப்பை அடுத்து இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் மற்றும் இதர விமான நிறுவனங்களும் குறிப்பிட்ட நாட்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்குப் பல்வேறு சலுகையை அறிவித்துள்ளது.
அப்படி என்னதான் சலுகை இருக்கு வாங்க பாப்போம்..

 ஸ்பைஸ்ஜெட்
இந்நிறுவனம் தனது அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் ஒற்றை வழித்தட பணியில் 12 ரூபாய் என்ற மலிவு விலை டிக்கெட்-ஐ அறிவித்துள்ளது.
புக்கிங் காலம்: மே 23,2017 முதல் மே 28,2017
பயணத்தின் நாள்: ஜூன் 26, 2017 முதல் மார்ச் 24,2018 வரை
குறைந்தப்பட்ச கட்டணம்: ரூ.12 (நிறுவனத்தின் அறிவிப்பின் படி)

இண்டிகோ
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குப் போட்டியாக இண்டிகோ நிறுவனம் 11 ரூபாய் என்ற அடிப்படை கட்டணமாகவும், அனைத்துக் கட்டணங்களும் சேர்த்து 899 என்ற 2 ஆஃபரை அறிவித்துள்ளது.
புக்கிங் காலம்: மே 23,2017 முதல் மே 28,2017
பயணத்தின் நாள்: ஜூன் 26, 2017 முதல் மார்ச் 24,2018 வரை
குறைந்தபட்ச கட்டணம்: ரூ.11 (நிறுவனத்தின் அறிவிப்பின் படி)

ஜெட் ஏர்வேஸ்
நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டும் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.
புக்கிங் காலம்: மே 24,2017 முதல் மே 26,2017
பயணத்தின் நாள்: ஜூன் 15, 2017 முதல் செப்டம்பர் 20,2017 வரை
குறைந்தபட்ச கட்டணம்: ரூ.1,079 (அனைத்துக் கட்டணங்களும் சேர்த்து)

ஏர் ஏசியா
ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் மத்தியிலான போட்டியில் மலேசிய நிறுவனமான ஏர்ஏசியாவும் களமிறங்கியுள்ளது.
புக்கிங் காலம்: மே 23,2017 முதல் மே 28,2017
பயணத்தின் நாள்: நவம்பர் 23,2017
குறைந்தபட்ச கட்டணம்: 1,699 ரூபாய்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.