13.5 கோடி மக்களின் ஆதார் தகவல்கள் இணையத்தில் கசிந்ததா.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!மத்திய அரசு மாற்றும் மாநில அரசுகள் இரண்டும் சேர்ந்து 13.5 கோடி நபர்களின் ஆதார் விவரங்களை அனுமதியின்றிக் கசியவிட்டுள்ளது என்று பெங்களூருவைச் சேர்ந்த இணையம் மற்றும் சமூகம் மையம் (CIS) ஆராய்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது பொது மக்கள் இடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையை ஆதார் தகவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் (அல்லது பற்றாக்குறை), ஆதார் எண்ணுடன் தனிநபர்களின் முக்கிய நிதி விவரங்கள் கசியவிட்டுள்ள அரசின் நான்கு தரவுத்தளங்கள் என்ற பெயரில் இணையம் மற்றும் சமூகம் மையம் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு தளங்கள்
முதல் இரண்டு தரவுத்தளங்கள் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் - தேசிய சமூக உதவி திட்டம் (NSAP) டாஷ்போர்டு மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (NREGA) போர்டல் ஆகும்.


ஆந்திர அரசு தளங்கள்
பிற இரண்டு தரவுத்தளங்கள் எது என்றால் ஆந்திர அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் இணையதளத்தில் இருந்தும், சந்திரனா பீமா என்ற திட்டத்தில் இருந்து ஆதார் தரவுகள் வெளியாகியுள்ளன.

4 இணையதளங்கள்
நான்கு இணையதளத்தில் இருந்த பெறப்பட்ட விவரங்களை வைத்துப் பார்க்கும் போது 130 முதல் 135 மில்லியன் நபர்களின் ஆதார் எண், மற்றும் 100 மில்லியன் நபர்களின் முக்கிய வங்கி கணக்கு விவரங்கள் கசிந்ததுள்ளதாக ஆராய்ச்சி அறிக்கையின் ஆசிரியர்கள் ஆம்பர் சின்ஹா மற்றும் ஸ்ரீனிவாச கோடலி இருவரும் கூறியுள்ளனர்.

 கட்டுப்பாடுகள் இல்லை
இணையம் மற்றும் சமூகம் மையத்தின் அறிக்கையின் படி இந்த அரசு நிறுவனங்களின் டாஷ்போர்டுகள் மற்றும் தரவுத்தளங்கள் வெளியானதற்குச் சம்மந்தப்பட்ட துறைகளில் சரியான கட்டுப்பாடுகள் இல்லாதது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 கசியப்பட்ட வங்கி கணக்குகளின் விவரங்கள்
தேசிய சமூக உதவித் திட்டத்தின் இணையதளத்தின் வழியாக மட்டும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட 94,32,605 வங்கி கணக்குகள் மற்றும் 14,98,919 தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்குகள் விவரங்கள் வெளியாகியுள்ளது.

 தொடர் கசிவு
இந்தியாவின் தனித்த அடையாள அடையாள ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆதார் எண்கள் மூலம் விவரங்கள் தொடர்ந்து கசிந்து வருவது அத்தகைய தரவின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இது குறித்து இந்தியாவின் தனித்த அடையாள அடையாள ஆணையம் என்ன பதில் அளிக்க இருக்கின்றது என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

அதிகாரிகளின் அறியாமை
அரசு நிர்வாகங்கள் வெளிப்படையாகச் செயல்படுகின்றன என்று காட்டிக்கொள்ளப்படுவதற்காகத் தனிப்பட்ட நபர்களின் ஆதார் எண், சாதி, மதம், முகவரி, புகைப்படங்கள் மற்றும் நிதித் தகவல்களை வெளியிடுவது எவ்வளவு ஆபத்தானது என்று அந்த அதிகாரிகள் அறியவில்லை என்பதையே காட்டுகின்றது என்கின்றனர் துறை சார்ந்து வல்லுநர்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.