ஷார்ஜாவில் 2 லட்சம் திர்ஹம் நஷ்டஈடு செலுத்தி விடுதலையான இந்திய சேப்டி ஆபீஸர் !சேப்டி ஆபீஸர்கள்  சமூக வலைத்தளங்கள் மூலமாக பொருள் திரட்டினார்      ப்யூர் கோல்டு ஜூவல்லரியின் உரிமையாளர் பெரோஸ் மெர்ச்சண்ட்  அவர்களும்உதவி  வழங்கினார்கள் இந்த மனிதாபிமான செயல் எல்லோராலும் பாராட்டப்பட்டது

ஷார்ஜாவில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் 'சேப்டி ஆபீஸர்' (safety officer) எனும் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர் கேரளாவை சேர்ந்த அம்ருதானந்தன். 2015 ஆம் ஆண்டு அவர் பணியாற்றிய நிறுவனத்தில் சப்ளை கம்பெனி எனும் துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியராக பணியாற்றி பங்களாதேஷ் நாட்டு தொழிலாளர் ஒருவர் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து பலியானார், அப்போது அவர் எத்தகைய பாதுகாப்பு சாதனங்களையும் அணிந்திருக்கவில்லை.

மேலும், அம்ருதானந்தன் பணியாற்றிய நிறுவனத்தின் இன்ஷூரன்ஸூம் ஓரிரு தினங்களுக்கு முன்தான் புதுப்பிக்கப்படாமல் காலாவதி ஆகியிருந்தது. எனவே, வழக்கை விசாரித்த ஷார்ஜா நீதிமன்றம் பாதுகாப்பு அதிகாரி என்ற வகையில் இந்த மரணத்திற்கு அம்ருதானந்தனே பொறுப்பு என்று கூறி 2 லட்சம் திர்ஹத்தை இறந்த பங்களாதேஷ் தொழிலாளியின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிட்டது.

அம்ருதானந்தன் பணியாற்றிய நிறுவனம் 1 லட்சம் திர்ஹத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் இன்னொரு லட்சத்தை செலுத்த முடியாமல் கடந்த 2 வருடங்களாக சிறையிலிருந்தார். இந்த செய்தி கடந்த 2 மாதங்களுக்கு முன் கல்ப் நியூஸ் பத்திரிக்கையில் வெளியானதை தொடர்ந்து, அவரைப் போலவே பாதுகாப்பு அதிகாரிகளாக அமீரகத்திலும் கத்தாரிலும் பணியாற்றும் பிற சேப்டி ஆபிஸர்கள் சமூக வலைத்தளங்களின் வழியாக ஒன்றுகூடி சுமார் 70,000 திர்ஹத்தை திரட்டினர் எஞ்சிய 30,000 திர்ஹத்தை ப்யூர் கோல்டு ஜூவல்லரியின் உரிமையாளர் பெரோஸ் மெர்ச்சண்ட் அவர்கள் வழங்கியதை தொடர்ந்து விடுதலையானார்.

சுமார் 3 வருடங்களுக்குப் பின் நாடு திரும்பும் அம்ருதானந்தன் திருமண செய்த ஒரு மாதத்தில் மனைவியையும் பிற குடும்ப அங்கத்தினர்களையும் பிரிந்து அமீரகம் வந்தவர். தனக்கு பொருளாதார உதவிகள் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அம்ருதானந்தனுக்கு விமான டிக்கெட்டையும் வீட்டிற்கு தேவையான சில பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கினர் சில தனியார் பாதுகாப்புத் துறை ஊழியர்கள்.

அம்ருதானந்தன் மீண்டும் அமீரகம் வருவேன், பெற்ற பாடத்தை அடிப்படையாக கொண்டு வேலையில் மேலும் ஜாக்கிரதையாக செயல்படுவேன் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சுமார் 200க்கு மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றுகூடி அமீரகத்தின் பாதுகாப்புத் துறை சட்டங்களை படித்து அறிந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படவும் சங்கல்பம் ஏற்றனர்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.