துபாயில் வருடத்திற்கு 2 முறை மட்டுமே சிறப்புத் தள்ளுபடி விற்பனை !துபையின் சிறப்பம்சங்களுள் ஒன்று மக்களை ஈர்க்கும் வியாபாரமும் அதன் உத்திகளுமே! சிறப்புத் தள்ளுபடி எனும் ஒரு வகை வியாபாரம் வருடம் முழுவதும் வர்த்தக நிறுவனங்களால் தனித்தனியாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதை வருடத்திற்கு 2 முறை மட்டுமே என முறைப்படுத்தியுள்ளது துபை வர்த்தக திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனைகளுக்கான துறை.(Dubai Festivals and Retail Establishment - DFRE)

அமீரகத்தின் தேசிய தினமான டிசம்பர் 2 ஆம் நாள் மற்றும் மே மாதம் 18 முதல் 20 வரை 3 நாட்கள் என இரு காலகட்டங்களில் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்கு (Super Sale) அனுமதிக்கப்படும், சுமார் 30 முதல் 90 சதவிகிதம் வரை இந்தக் காலக்கட்டங்களில் தள்ளுபடி செய்து பல்வேறு பொருட்களும் விற்கப்படும்.

இதைத் தவிர மூடப்படும் வர்த்தக நிறுவனங்கள் ஏதாவது தள்ளுபடி விற்பனையை அறிவிக்க விரும்பினால் அந்த நிறுவனத்தின் லைசென்ஸை முற்றாக ரத்து செய்து விட்டு சிறப்பு அனுமதி பெற்ற பின்பே மேற்காணும் 2 காலகட்டங்கள் தவிர்த்த பிற நாட்களில் அறிவிக்க முடியும்.

Source: Khaleej Times / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.