முத்துப்பேட்டை கோரையாற்றில் மணல் அள்ளிய 2 டிராக்டர் பறிமுதல்முத்துப்பேட்டை  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அரசு அனுமதியுடன்  பல்வேறு பகுதிகளில் குளங்கள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. குளங்களில் மூன்றரை அடி ஆழத்துக்கு மட்டும் மணல் எடுக்க வேண்டும் என்ற விதியை மீறி பல இடங்களில் அதிகளவில் மணல் வெட்டியெடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தில்லைவிளாகத்தில் உள்ள கோரையாற்றில் மணல் வெட்டி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது  கோரையாற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய இரண்டு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து  டிராக்டரை ஓட்டிவந்த சிவா, வைத்தியநாதன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.