மாற்றுத்திறனாளி ஷேக்அலாவுதீன் எரித்து கொலை 2 பேர் கைதுதிருவாரூர் அருகே மது குடித்ததை கண்டித்ததால் ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் அருகே உள்ள கூத்தாநல்லூர் பூதமங்கலத்தை சேர்ந்தவர் ஷேக்அலாவுதீன் (வயது55). மாற்றுத்திறனாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் திருவாரூர் வண்டிக்கார தெருவில் உள்ள சலவை கடை முன்பு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மது குடித்தனர். இதைக்கண்ட ஷேக்அலாவுதீன் இங்கு மது அருந்தாதீர்கள் என கூறி அவர்களை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே அப்பகுதி மக்கள் வாலிபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு மது போதையில் இருந்த அந்த வாலிபர்கள் மீண்டும் திரும்பி வந்து தூங்கி கொண்டிருந்த ஷேக் அலாவுதீன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் ஷேக்அலாவுதீன் அலறி துடித்தார். பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
ஷேக்அலாவுதீனின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து அவரது உடலில் பரவிய தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீக்காயம் அடைந்த அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 வாலிபர்கள் கைது

விசாரணையில் கொரடாச்சேரி அருகே உள்ள நாளில் ஒன்று பகுதியை சேர்ந்த முருகன் (37), கொரடாச்சேரி பத்தூரை சேர்ந்த உலகநாதன் (35) ஆகிய இருவரும், மது குடித்ததை கண்டித்ததால் ஆத்திரத்தில் ஷேக்அலாவுதீன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் முருகன், உலகநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.