பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட அனைவரும் 30-ம் தேதி ஆஜராக உத்தரவுபாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களின் ஒருவரான எல்.கே.அத்வானி மற்றும் மத்திய அமைச்சர் உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க லக்னோ சிபிஐ நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி ஆகியோர் மீது முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு பிறகு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் விசாரித்த போது எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்தும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 அத்வானி  ஜோஷி  உமா பாரதி  போன்ற  வயதானவர்களை  பாஜகவில் இருந்து ஓரங்கட்ட திட்டமா?  என்ற சர்சை  கட்சிக்குள்ளேயிருந்து  கிளம்பியுள்ளது

அதாவது பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு விசாரணையை ஒரு மாதத்திற்குள் தொடங்கி நாள் தோறும் நடத்த வேண்டும் என்றும், இந்த விசாரணையை விரைவில் முடித்து இரு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி லக்னோ சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு மீது கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.  இந்நிலையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். ஆனால் லக்னோ சிபிஐ நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.