ஷார்ஜாவில் இருந்து கடத்திய 3.9 கிலோ தங்கம் கோவையில் பறிமுதல்ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் 3.9 கிேலா தங்கத்தை கடத்திய 3 பேர் கைதாகினர். கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் பல மாநிலங்களுக்கும் விமானம் இயக்கப்படுகிறது. கடந்த திங்கள்கிழமை அதிகாலை ஷார்ஜாவில் இருந்து ஒரு விமானம் கோவைக்கு வந்தது. இதில் வந்த பயணிகளை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், 3 பேரது உடமைககளில் தங்கம் கடத்தியது தெரியவந்தது. ஆம்பிளிபயரில் 1.4 கிலோ தங்கம், வேக்கம் கிளீனரில் 1.4 கிலோ தங்கம் உட்பட 3.9 கிலோ எடை கொண்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.07 கோடி  இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.