தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் கட்டுவதற்கு 50 சதவீத மானியம்: விண்ணப்பிக்க அழைப்பு !தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் புதிய மீன்பிடி விசைப்படகுகளை கட்டுவதற்கு 50 % மானியம் அரசு வழங்குகிறது. மீனவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தூண்டில் மற்றும் செவுள்வலை மூலம் சூரை மீன்பிடிப்பதற்கு ஏதுவாக மீனவர்கள் புதிய மீன்பிடி விசைப்படகுகளை கட்டுதலுக்கான 50% மானிய உதவி வழங்கும் திட்டம்.

அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும், ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்திடவும், தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டும் மீனவர்களுக்கான ஒரு புதிய திட்டத்தினை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு செவுள்ள வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டிட படகொன்றிற்காகும் செலவினத்தில் 50 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.30 இலட்சம் வரை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும்.

தமிழகத்தை சார்ந்த முழு நேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை மீன்வளத் துறையின் இணைய தளமான www.fisheries.tn.gov.in  -லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன் துறை துணை / இணை இயக்குநர்கள் மற்றும் கடலோர மாவட்ட மீன் துறை உதவி இயக்குநர்கள் அலுவலகங்களில் அலுவலக நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன் துறை இணைய தளத்தில் உள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மீன்துறை ஆணையர், நிர்வாக அலுவலக கட்டடங்கள், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600 006 என்ற முகவரிக்கு பதிவு / விரைவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 16.06.2017 பிற்பகல்  5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி படகின் வரைபடம் தகுதி வாய்ந்த கப்பல் / மீன்பிடி கலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து ( Naval Architect ) பெற்று அசலாக இணைக்கப்பட வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாநில அளவிலான பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் தெளிவுரைகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அல்லது நாகப்பட்டிணம் மண்டல மீன்வளத்துறை இணை இயக்குநரை நேரிலோ அல்லது சம்பந்தப்பட்ட அலுவலக தொலைபேசி மூலமாகவோ (தொலைப்பேசி எண் 04362-235389, 04365-253010) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாமென தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.