முஸ்லீம்களுக்கான 7 சதவீத இடஒதுக்கீட்டை உயா்த்தி வழங்க வேண்டும்முஸ்லீம்களுக்கான 7 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் 14 வது மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொது செயலாளா் முஹம்மதுயூசுப் தலைமை வகித்தார். மாநில செயலாளா் முஹம்மது முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மோடி ஆட்சியில் இந்திய அளவில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினா் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் போன்றோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டு வருவதும், ஆதரித்து பேசுவதும் கண்டிக்கதக்கது, இவா்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த தவறிய மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் 3.5 சதவீதம் இடஒதுக்கீட்டை, 7 சதவீதமாக உயா்த்தி தருவதாக வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்று தோ்தலில் வெற்றபெற்ற தமிழக அரசு, முஸ்லீம்களின் 7 சதவீதம் இடஒதுக்கீட்டை உயா்த்தி வழங்க வேண்டும்.
பருவமழை பொய்த்து போனதால், தமிழகத்தில் குடிநீருக்கும் மற்ற உபயோகத்திற்கும் கடுமையான தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே தமிழக அரசு, முன்னேற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். விவசாயத்திற்கு தேவையான நீரை ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரை மட்டும் நம்பாமல், தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து மழைநீரை சேமித்தால், எந்த மாநிலத்தையும் நம்பி இருக்கும் நிலை ஏற்படாது. எனவே பெய்யும் மழைநீரை அணைகளை கட்டி சேமிக்க வேண்டும். இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களை
பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சோ்க்க அரசானையை பிறப்பி–்க்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.