கொள்ளை காடாக மரியா தமிழகம் இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகை கொள்ளைசேலம் அருகே இரும்பு வியாபாரி வீட்டில் இருந்த 720 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சேலம் அடுத்த கிச்சிப்பாளளையம் அருகே இரும்பு வியாபாரி விஜயலட்சுமி வீட்டில் இருந்த 720 சவரன் நகைகளை  மர்ம நபர்கள் வீட்டின் இரும்பு ஜன்னலை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

விஜயலட்சுமி குடும்பத்துடன் திருப்பத்திக்கு சென்றநிலையில் கொள்ளை நடந்துள்ளது.

சம்பவத்தன்று வீட்டில் வயதான அம்மா, அப்பாவும் வீட்டில் இருந்துள்ளனர்.

இதுகுறித்து கிச்சிப்பாளளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் இருந்த சிசிடிவி கேமாரக்களில் பதிவான காட்சிகளை வைத்து இரும்புக்கடையில் பணிபுரியும் 9 பேர் மற்றும் வீட்டில் பணிபுரியும் பணியாளர்களிடம் போலீஸார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கொள்ளையடித்துச் சென்றுள்ள மர்ம நபர்கள் கொள்ளை குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தால் தங்களின் குடும்பத்தை அழித்துவிடுவோம் என்றும் மிரட்டல் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துச்சென்றுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.