மதீனாவில் 80 நாடுகள் போட்டியிட்ட பாரம்பரிய, கலாசார நிகழ்வு. இரண்டாமிடத்தை வென்று இலங்கையர்கள் அசத்தல்.பாரம்பரிய, கலாசார நிகழ்வில் இலங்கை இரண்டாமிடம்!

இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஒரு வார காலமாக நடைபெற்று வந்த சுமார் 80 க்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையிலான கலாசார, பாரம்பரிய அடையாளச் சின்னங்களை காட்சிப்படுத்தும் போட்டியில் எமது தாயகம் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்று கியா மொடல் காரை (Kia Model Car) பரிசாகப் பெற்றுள்ளது.

இலங்கை சார்பாக இப்போதைய இலங்கை மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அஷ் ஷைக் முஜீப் ஸஹ்வியின் தலைமையின் கீழ் ஒரு குழு சிறந்த முறையில் அனைத்து பணிகளையும் முன்னெடுத்து, தமது ஆக்கபூர்வமான ஆற்றல்களையும் திறமைகளையும் இலங்கையைப் பிரதிபலிக்கும் வகையில் சமர்ப்பித்து, பார்வையிட வந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் ஆதரவைப் பெற்று நாளாந்த வாக்கெடுப்பின் இறுதியில் இன்று இரண்டாம் இடத்தைப் பெற்று பல்கலைக்கழகத்தில் ஓர் வரலாற்றுப் பதிவை பதித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

சுமார் 25000க்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கும் இப்பல்கலைக்கழகத்தில் பெரும் எண்ணிக்கை மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளுக்கிடையில் சிறுபான்மை எண்ணிக்கையினரான எமது இலங்கை மாணவர்கள் அனைவரையும் தாண்டி மேலெழுந்து சாதனை புரிந்தது பாராட்டத்தக்கதொரு விடயமாகும்.

இப்பணியை திறம்பட நிறைவேற்றி இலங்கைக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த அக்குழுவினருக்கும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், வாக்களித்து உற்சாகமூட்டி இவ்வெற்றிக்கு வழிவகுத்த அனைவருக்கும் ஜஸாகுமுல்லாஹு கைரா.

ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகட்டும்.
الحمد لله الذي بنعمته تتم الصالحات

மகிழ்ச்சிக் களிப்புடன்
இவண்
அ(z)ஸ்ஹான் ஹனீபா

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.