துபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)இவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று மாதங்களாக நடைபெற்றது, நமதூரை சுற்றியுள்ள மதுக்கூர், அதிரை போன்ற அணிகள் பங்கு பெற்றனர், நமதூர் முத்துப்பேட்டை மூன் லைட் (MMCC) அணி களம் இறங்கினர். இன்று (12-05-2017) இறுதி ஆட்டமாக முத்துப்பேட்டை மூன் லைட் அணியும் அதிரை ABCC அணியும் மோதினர் இதில் நமதூர் அணி வெற்றிபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

முத்துப்பேட்டை மூன் லைட் அணி 146 ரன் (16 ஓவர்)

அதிரை ABCC அணி 76 ரன் (ஆள் அவுட்) (12 ஓவர்)

இறுதிப்போட்டியில் நுழைந்த நமது அணி இப்போட்டியில் கோப்பையையும் முதல் பரிசுக்கான தொகை AED 1500/- பரிசை தட்டிச்சென்றது.

இப்போட்டியினை கான்பதற்க்கு நமதூரை சேர்ந்த ஏராளமானோர்  கலந்து நமது அணியினரை தொடர்ந்து உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

கடல் கடந்து சென்று தங்களின் கடும் வேலைகளுக்கு மத்தியில் தங்களின் கிரிக்கெட் திறமையால் முத்துப்பேட்டைக்கு பெருமை தேடித்தந்த நமதூர் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.