கொழுப்புக் கட்டிகளைக் குணப்படுத்தும் ஹோமியோபதி



 மருத்துவ உலகில் புரிந்து கொள்ளப்படாத விஷயங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ‘LIPOMA’ எனப்படும் கொழுப்புக்கட்டி. இது திடீரெனத் தோன்றும் நோயல்ல. படிப்படியாக நீண்ட காலம் எடுத்து மெல்ல உருவாகக்கூடியது. ஒரு கட்டத்தில் தொட்டால் தெரியுமளவு வளர்ந்த பின்னரே நமது கவனத்திற்கு வரும். வெளிப்படையாகப் பார்த்தவுடன் கட்டி தெரிவதற்கு மேலும் பல காலம் ஆகும். பொதுவாக இக்கட்டி குறித்து ஆயுளுக்கும் அச்சப்படத் தேவையில்லை. 30க்கு மேற்பட்ட வயதினரிடம் அதிகமாக இக்கட்டி காணப்படுகிறது. பெண்களிடம் அதிகமாக SINGLE LIPOMAவும் ஆண்களிடம் அதிகமாக MULTIPLE LIPOMA வும் காணப்படுகிறது. குழந்தைகளிடம் அரிதாக காணப்படுகிறது.

அமைப்பும், அறிகுறிகளும் :

தோலுக்கும் அதன் அடியிலுள்ள தசையடுக்கிற்கும் இடையில் Adipose Tissue எனப்படும். கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியே Lipoma கட்டியாக உருவெடுக்கிறது. மனித உடல் போர்வை போல Adipose திசுக்களால் மூடப்பட்டுள்ளது. இது உடலுக்கு வெப்பத்தை, மென்மையை, அழகைத் தருகிறது. தோலின் கீழ் நளுக்நளுக்கென்று தோலில் ஒட்டாமல் நழுவிச் செல்வதுபோல் இருப்பது கொழுப்புக் கட்டியின் முக்கிய அடையாளம். இதை தவிர வேறெந்த அறிகுறிகளும் (Asymptomatic) தென்படுவதில்லை. கொழுப்புக் கட்டி மென்மையானது; புற்றல்லாத, தீங்கற்ற கட்டி[BENIGN] குழைத்த மாவு போல (ரப்பர் போல) காணப்படுவது.

இக்கட்டிகள் உருண்டை வடிவில் அல்லது முட்டை போன்ற நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும். சிறிய கட்டிகள் ஒரு செ.மீ. வரை விட்ட அளவு இருக்கும். பெரிய கட்டிகள் சிலரது உடலில் வளரலாம். பொதுவாக தொட்டாலோ, அழுத்திப் பார்த்தாலோ வலி இருக்காது. விதி விலக்காக சில கட்டிகளில் வலி இருக்கலாம். அவை சற்று ரத்த ஓட்டம் அதிகமுள்ள Angio Lipoma எனப்படும் கொழுப்புக் கட்டிகளாகும். எனினும் ஆபத்தானவை அல்ல. LIPOMA எப்போதுமே (பிற கட்டிகள் போல) புற்றாக மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன?  

கொழுப்புக் கட்டிகள் தோன்றுவதற்கான பிரதான காரணிகள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. சிறு காயங்கள் கூட இக்கட்சி வளர்ச்சியினைத் தூண்டலாம். அதிக எடை, உடல் பருமன், கொலஸ்டிரால் போன்ற காரணங்களால் தான் LIPOMA ஏற்படுகிறது என்று உறுதியிட மருத்துவ உலகம் கூற முடியவில்லை. பாரம்பரியக் காரணங்களால் வளர்வது உறுதி செய்யப்படுகிறது. அத்தகைய நிலையில் (Familial Multiple Lipomatosis) குடும்ப வழிப் பன்மடங்கு கொழுப்புக் கட்டிகளாக வளர்கிறது. செயல்திறன் குன்றிய - மந்தமான கல்லீரல் இயக்கத்துடன் இக்கட்டிகளுக்கு தொடர்பு உள்ளதாக சில ஆராய்ச்சிக் குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஆபத்து உண்டா?

உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றக் கூடியது கொழுப்புக்கட்டி. பொதுவாக கொழுப்பு சேகரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் (Fat depositing Areas) குறிப்பாக கழுத்துப்பிடரி, தோள், முதுகு, முன் உடல் (Trunk), கைகள், பிருஷ்டம், இடுப்பு, தொடை, வயிறு போன்ற இடங்களில் தோன்றுகிறது.

கொழுப்புக் கட்டிகளால் உடனடியாக எந்தவித ஆபத்தும் இல்லை. எனினும் எதிர்காலத்தில் இவை கேன்சராக மாறிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை. ஆனால் அவ்வாறு மாறாது. ஆயினும் LIPOSARCOMA எனும் ஒருவகைக் கொழுப்புப் புற்றுநோய் உள்ளது. இது தோலில் அல்லாமல் சற்று ஆழத்தில் கண்களுக்கு தெரியாமல் பதுங்கியிருக்கும்.

உள்ளுறுப்புகளின் மீது வளரும் கொழுப்புத் திசுக்கட்டிகள் மிக அபாயகரமாக அமையக்கூடும். சில கட்டிகள் பெரிதாகி பருமனடைந்து (குறிப்பிட்ட நரம்புகளை அழுத்தினால்) வலி ஏற்படும். (இந்நிலையில் திசு பரிசோதனை (BIOPSY) செய்து பார்ப்பதுண்டு). இரைப்பை மற்றும் குடல்பாதை மீது கொழுப்புத்திசு கட்டி அமையுமானால் வலிமிக்க அடைப்பு, புண், ரத்தப்போக்கு, உணவு விழுங்க முடியாத நிலை (dysphagia), உணவு எதிர்க்களிப்பு, வாந்தி போன்ற பிரச்சினைகள் உருவாக்கலாம். நுரையீரல் காற்றுப் பாதைகளில் கொழுப்புத்திசுக் கட்டிகள் அமையுமானால் சுவாசம் தடைப்படக்கூடும். முதுகெலும்பு மீது ஏற்பட்டால் நிரந்தர அழுத்தம் காரணமாக பல வித சிக்கல்கள் பிறக்கும். இதே போல் பெண்களின் மார்பகங்களிலும், பிறப்புறுப்புகளிலும் உண்டாகும் கொழுப்புத்திசுக் கட்டிகளால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

சந்தர்ப்பசமாக கொழுப்புத்திசுக் கட்டிகளால் நரம்பியல் பாதிப்புகள் (Neurological Discomforts) மற்றும் கடும் வலிகள் ஏற்படுமாயின், அருகிலுள்ள தசைகள், உறுப்புகளின் இயக்கத்திற்கு பிரச்சினை எனில் ஆங்கில மருத்துவமுறைச் சிகிச்சையின்படி LIPOSUCTION மூலம் உறிஞ்சப்பட்டு அல்லது அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு நிவாரணம் பெற வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்படும்.

கொழுப்புத் திசுக்கட்டிகள் எத்தனை வகை?

பலவகை கொழுப்புத் திசுக் கட்டிகள் உள்ளன. அவற்றில் பரவலாக பெரும்பாலோரிடம் காணப்படுவது மேலோட்டமான தோலடி கொழுப்புத் திசுக்கட்டி [Superficial Subcutaneous Lipoma]. தோல் புறப்பரப்பின் அடியில் (Just below the surface of the skin) கொழுப்புத் திசுக்களால் ஏற்படும் கட்டி. கொழுப்புத் தேக்கமுள்ள இடங்களில் எல்லாம் இக்கட்டிகள் தோன்ற வாய்ப்புள்ளது. பெரும்பாலும் முன்கையில், தொடையில், முன் உடலில் (Trunk) ஏற்படும்.

Adiposa dolorosa என்பது ஒன்றுக்கு மேல் ஒன்று தோன்றும் கட்டிகள். Intra Muscular Lipoma என்பது கைகால் பெருந்தசைகளின் ஆழத்தில் காணப்படுவது. Chondroid Lipomas என்பது பெண்களின் கால்களில் ஆழமாக ஏற்படும் உறுதியான மஞ்சள் கட்டிகள். Spindle Lipomas எனப்படும் கதிர்செல் கொழுப்புத்திசுக் கட்டி மெதுவாக வளரும் தோலடிக் கட்டி வகையாகும். (Subcutaneous Lipoma) பெரும்பாலும் முதிய ஆண்களிடம் ஏற்படும் கழுத்து, மூக்கு, தோற்பட்டையில் உருவாகும். Neural Fibrolipoma என்பது நரம்புச் சார்ந்த மிகை கொழுப்புத்திசுக் கட்டி ஆகும். இதனால் நரம்பு அழுத்தம் ஏற்படும். Neural Fibrolipoma என்பது வலிமிக்க தோலடி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.