தமிழக முஸ்லிம்கள் தமிழர்களே கிடையாது எச்.ராஜா-முதலில் இவர் தமிழரா? அல்லது சோன்பப்டி விற்க வந்த ஷர்மாவா?

வரலாறும் ஆய்வுகளும்  இப்படி சொல்கிறது. திரு. ராஜா படிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாயை மூடிக் கொள்ள வேண்டும்.

தமிழ் இசுலாமியர்கள் தனது தந்தையை அத்தா என்றழைப்பர்...
அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்.
அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது...
அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்...
பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்...
அத்தா, அச்சன், முத்தன், அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்...
“அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்” கம்பராமாயணம்.
“அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே” தேவாரம்.
” சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் சிவனைத் தன் தந்தையெனக் கருதி இயற்றிய ஒரு பாடல் .
“அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே”” என்ற பாடலில் அத்தா என்ற சொல் வருவதை கவனிக்கலாம்.
அப்பன் -அப்பா, அத்தன் – அத்தா. தகப்பன் அல்லது தலைவன் என்ற பொருள் படும்.
துருக்கியனை அத்தா என்று அழைக்க காரணம் தலைவன் என்ற பொருளில்தான்
தமிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தை அத்தா !!
அப்பா என்கிறவன் தனக்கு வாழ்வு கொடுக்கிற இடத்தில் இருப்பதால் சிலர் அப்பாவை வாப்பா என்றழைப்பர்.
செம்மொழித் தமிழே தமிழக முஸ்லீம்களின் தாய்மொழி. அவர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் உறைவதும் ஒலிப்பதும் செந்தமிழ். இதையே ‘எங்களுயிர்த் தமிழ் வழக்கு’ என்று அன்றே பாடினார் ஆபிதீன்.
‘பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே’
விளக்கவுரை தேவையில்லை. ஏனம், ஆணம், நீர்ச்சோறு, சோறு முதலான எண்ணற்ற உணவு மற்றும் உறவு முறைச்சொற்களை தமிழ் முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக வழங்கி வருகின்றனர்.
இன்றைக்கு அத்துனை இஸ்லாமியர்கள் வீடுகளில் எல்லா நேரங்களிலும் தமிழ் நடைமுறைப் பேச்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது
யாரெல்லாம் இன்றும் தொழுகை, நோன்பு ,ஆணம் பள்ளிவாசல்கள் என்று கூறுவாரோ அவரெல்லாம் சமணத்திலிருந்து வந்த தூய தமிழ் கடற்கரை வாழ் இஸ்லாமியர்களே!!!

- அறிஞர் இப்ராஹிம் அன்சாரி
அதிரை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.