மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: என்.ஐ.ஏ தகவல்மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தர்கள் மீது இரட்டை வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த இரட்டை வெடி குண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரித்தது. இதில்,  லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித், மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் முதன்முதலாக குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றனர். 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாத்வி பிரக்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தது.

இந்த வழக்கில் பிரக்யா சிங் தாக்குருக்கு மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி ஜாமீன் அளித்தது. இதைத் தொடர்ந்து, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி, மும்பையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் பிரக்யா சிங் தாக்குர் மனு தொடுத்திருந்தார். இந்த மனு, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது என்ஐஏ அமைப்பின் சார்பில் வக்கீல் அவினாஷ் ரசல் ஆஜராகி கூறுகையில்,வழக்கில் இருந்து பிரக்யா சிங் தாக்குரை விடுவிப்பதற்கு ஆட்சேபணை இல்லை. அவருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு போதிய ஆதாரமில்லை என்று ஏற்கெனவே என்ஐஏ அமைப்பு தெரிவித்துவிட்டது” என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.