முத்துப்பேட்டை பகுதியில் நீர் தேக்கத்தில் ரெகுலேட்டர்களை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்முத்துப்பேட்டை பகுதியில் நீர் தேக்கத்தில் ரெகுலேட்டர்களை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய பகுதியில் உள்ள பாமணியாறு, கோரையாறு, கந்தபரிசான் ஆறு, மரைக்காகோரையாறு, வளவனாறு போன்ற ஆறுகளில் இருந்து விவசாயிகள் தங்களது சாகுபடி மற்றும் விளை நிலங்களுக்கு நீர்ஆதாரம் பெறுகின்றனர். இதில் முத்துப்பேட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் ஆற்றில் மழை வெள்ள காலங்களில் பெருகி வரும் தண்ணீரை ஆங்காங்கே தேக்கிவைத்து விவசாய நிலங்களுக்கு திருப்பிவிட பாசன ரெகுலேட்டர் அமைக்கப்பட்டுள்ளன. கோரையாற்றில் தேவதானம் துவங்கி நாணலூர், வீரன்வயல் கந்தபரிச் சானாறு ஜாம்புவானோடை ஆகிய பகுதிகளில் பாசன ரெகுலேட்டர்களை பொதுப்பணித்துறையினர் சரிவர பராமரிப்பதில்லை.

மேலும் உப்பூர் மற்றும் இடும்பாவனம் செக்போஸ்ட் அருகே இருதடுப்பணைகளும் உள்ளன. அதேபோன்று பாமணியாற்றில் சேரங்குளம், பெருகவாழ்ந்தான், தப்பதான்வெளி ஆகிய இடங்களில் ரெகுலேட்டர்கள் உள்ளன. குறிச்சி, மேலநம்மங்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் பாண்டி, கடுவெளி போன்ற பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் கட்டபட்டு வெள்ள நீரைத்தேக்கி வைக்க பயன்பட்டு வருகின்றன.

இந்த ஒன்றியம் முழுவதும் உள்ள தடுப்பணைகளில் சுமார் ஆறடிவரையிலும் தண்ணீரை தேக்கிவைத்து சாகுபடிக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, தில்லைவிளாகம், மங்கலூர் பகுதிகளில் மின்பம்ப் மோட்டார்கள்  உதவியுடன் இறவை பாசனத்திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் சாகுபடிக்கு பெரும்பயனாக உள்ள ரெகுலேட்டர்களை சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரிவர பராமரிக்க படாமல் உள்ளதால் அனைத்தும் பொழிவு இழந்து சேதமாகியுள்ளன. பல இடங்களில்  ரெகுலேட்டர்கள் விரிசல் ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்து செல்லும் நிலைமையில் உள்ளன. அதேபோல் சமீபத்தில் புதியதாக கட்டப்பட்ட ரெகுலேட்டர்களும் தடுப்பணைகள்களை கூட சரிவர பராமரிக்கப்படாததால் அவைகள் க காட்சி அளிக்கிறது. ஆகவே தண்ணீர் வரும் காலத்திற்குள் அனைத்து ரெகுலேட்டர்களையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பழுது நீக்கி  பராமரித்து தயார் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வலியுத்தியுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.