முன்னாள் அதிரை சேர்மனுக்கு ஜப்பானில் வரவேற்பு ( படங்கள் ) 2011-2016 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் பேரூராட்சி பெருந்தலைவராக பொறுப்பில் இருந்தவர் எஸ்.எச் அஸ்லம். இவர் தொழில் நிமித்தமாக கடந்த வாரம் ஜப்பான் நாட்டுக்கு பயணமானார். இந்நிலையில், ஜப்பானில் வசிக்கும் அதிராம்பட்டினம் பகுதியினர் எஸ்.எச் அஸ்லம் அவர்களை நேரில் சந்தித்து வரவேற்று மகிழ்ந்தனர். மேலும் அதிரை பேரூராட்சி தலைவர் பணியின் போது ஆற்றிய சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

சந்திப்பு குறித்து முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் கூறியது:
தொழில் நிமித்தமாக ஜப்பான் வந்துள்ளேன். இங்குள்ள அதிரை சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடல் செய்தேன், என் மீது அன்பு பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் அனைவரின் உடல் ஆரோக்கியம், பர்கத் ஆகியவற்றிற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்தேன்' என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.