இந்த படிப்பை படிங்க! நிறைய காசு சம்பாதிக்கலாம்!12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்துவிட்டு வீட்டில் இருந்த குமாரை பார்த்து உறவுகாரர்கள் இவ்வாறு இலவச ஆலோசனைகளை எந்தவிதமான நெருடலும் இல்லாமல் வழங்கி கொண்டிருந்தனர்.

குமார் தனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்பதால் செல்லப்பிள்ளையாக வளர்ந்தான். தெருவில் குமாரை பலருக்கும் பிடிக்கும், விளையாட்டு என்றால் குமாருக்கு உயிர். தேசிய அளவிலான கைபந்து போட்டிகளில் பங்குபெற்று பல வெற்றிகளை பெற்றுள்ளான். இந்நிலையில் குமாரின் எதிர்காலம் நல்லமுறையில் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில், அடுத்து மகனை என்ன படிக்க வைக்கலாம் என பெற்றோர் சிந்தித்து வந்தனர். சில நாட்களில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தது, குமார் 1200க்கு 738 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். பெற்றோர்கள் தனது மகன் தேர்வில் வெற்றிபெற்றதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், அருகே இருந்த வெட்டிவாய் அதிமேதாவிகள் இதெல்லாம் ஒரு மதிப்பெண்ணா? என்ற ரீதியில் வாயில் அசைப்போட்டனர். மேலும் குமாரின் பெற்றோரிடம் சில பொறியியல் கல்லூரிகளின் பெயர்களை சொல்லி, இங்கே இந்த கோர்ஸ் இருக்கு, இது படிச்சா இவ்வளவு சம்பாதிக்கலாம், முதல்ல நாம கொஞ்சம் அதிகமா செலவு செய்யனும் அப்புறம் உன்னோட மகன் நல்லநிலைக்கு வந்துருவான் என சொல்லவேண்டியவைகளை சொல்லிக்கொண்டிருந்தனர்.

பெற்றோரும் பிறர் நல்லது தானே சொல்லுகின்றனர் என எண்ண துவங்கினர். விளைவு பெற்றோரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு ரூ.3 லட்சம் முதல் தவணை செலுத்தி பொறியியல் கல்லூரியில் குமார் சேர்க்கப்பட்டான்.

நாட்கள் கழிந்தது, கல்லூரி படிப்பை சற்று கடினமாக உணர ஆரம்பித்தான் குமார். இருந்தாலும் தனது பெற்றோருக்காக அமைதியாக படிப்பை தொடர்ந்தான். ஆனால் அவனின் பிரச்சனைக்கு தீர்வுகள் கூற யாரும் இல்லாததால் ஒருகட்டத்தில் அவன் தனது வாழ்க்கையை வெறுக்க ஆரம்பித்து, உச்சமாக தற்கொலையில் முடித்தான்.

இவ்வாறான நிகழ்வே பெறும்பாலான இடங்களில் நடைபெறுகிறது. அதற்காக பொறியியல் படிப்பே வேண்டாம் என்று ஒதுக்கி வைப்பது புத்திசாலித்தனம் அல்ல.

உதாரணமாக எப்படி வீட்டில் சமையல் செய்கின்ற போது உப்பு, மசாலா போன்ற பொருட்களில் தேவையானதை எடுத்து சமையல் செய்கின்றமோ அதேபோல் கல்வி துறையில், மருத்துவம், பொறியியல், வணிகம் போன்ற படிப்புகள் உள்ளன. இதில் நமக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்து படித்தால் வாழ்க்கை சுவையாக அமையும். இல்லையெனில் வாழ்க்கையின் சுவையை நாம் இழக்க நேரிடுவோம்.

-ஜெ.முகம்மது சாலிஹ்
#whatsapp_9500293649
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.