ரேன்சம்வேர் வைரஸால் ஆதார் தகவல்களை திருட முடியாது: மத்திய அரசு விளக்கம்எந்த வைரஸாலும் ஆதார் தகவல்களை அசைக்க முடியாது என்று இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. வான்னாகிரை எனப்படும் வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் இணையதள பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் இந்த வைரஸ் உலக நாடுகளின் இணைய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன. இதனிடையே இந்தியாவிலும் இதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா, திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட இடங்களில் வான்னாகிரை எனப்படும் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே வான்னாகிரை வைரஸ் மூலம் 114 கோடி இந்திய மக்களின் ஆதார் தகவல் திருடப்பட்டுவிடும் என்று பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனால் எந்த வைரஸாலும் ஆதார் தகவல்களை அசைக்க முடியாது என்று இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் பதில் அளித்துள்ள தனிநபர் அடையாள ஆணையத்தின் தலைவர் ஜே. சத்யநாராயணா ஆதார் தகவல்கள் என்கிரிப்ட் எனப்படும் குறியாக்க அடிப்படையிலான வடிவமைப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே இதில் பாதுகாப்புக் குறைபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் மத்திய அரசு ஆதார் ஒழுங்கமைப்பில் ரூ.7000 கோடி செலவழித்திருப்பதாகவும், மோசடியாக பயன்படுத்தப்பட்ட அரசின் நலத்திட்டங்களைக் களையெடுத்ததன் மூலமாக, ரூ.50,000 கோடி வரை அரசிற்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.