முத்துப்பேட்டை அருகே பரபரப்பு விடுதலை சிறுத்தை பிரமுகர் கார் கண்ணாடி உடைப்புதிருவாரூர்  மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு கிராமம்  செங்காங்காடு சாலையில் வசிப்பவர் வெற்றி. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட  பொருளாளர்.கான்ட்ராக்ட் அடிப்படையில் பழைய கட்டிடங்களை இடித்து  தரைமட்டமாக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வெற்றி  முத்துப்பேட்டையிலிருந்து காரில் வீடு திரும்பினார்.

பின்னர் காரை வீட்டின்  எதிரே நிறுத்திவிட்டு தூங்க சென்றார். நேற்று அதிகாலை வெற்றி எழுந்து  பார்த்தபோது அவரது காரின் முன்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல்லால் அடித்து  உடைத்து சென்று இருப்பது தெரிய வந்தது. வெற்றிக்கு ஏற்கனவே வேறு  சிலருடன் முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்கு இரவில் சென்ற வெற்றியை மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால்  வெட்டினர். அதிர்ஷ்டவசமாக அவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

அதனை தொடர்ந்து தற்போது இச்சம்பவம் நடந்து உள்ளது. இது குறித்து வெற்றி கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வெற்றி கூறுகையில், எனக்கு தொடர்ந்து  அச்சுறுத்தல் இருந்து வருகிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும். இல்லையேல் மக்களை திரட்டி  தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.