சாதியா சிக்கன் கேடானதால் துபாய் யூனியன் கோ-ஆப். சூப்பர் மார்க்கெட்களிலிருந்து அகற்றம் !ஐஸ் மூலம் பதனிடப்பட்ட சாதியா பிராண்டு சிக்கன்கள் (Frozen Sadia Chicken) கேடானாதாக தகவல் வந்ததையடுத்து உடனடியாக துபையின் அனைத்து யூனியன் கோ-ஆப் சூப்பர் (Union Co-op) மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் கிளைகளிலிருந்தும் உடனடியாக அகற்றப்பட்டன.

யூனியன் கோ-ஆப்பின் மார்க்கெட்டிங் இயக்குனர் சுஹைல் அல் பஸ்தாகி அவர்கள், கடந்த 3, 4 நாட்களுக்குள் சாதியா சிக்கன் வாங்கியவர்கள் மட்டும் அதற்கான ரசீதுடன் சிக்கனை திருப்பிக் கொடுத்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சாதியா பிராண்டு சிக்கன்கள் மட்டுமே கேடானதாக சந்தேகப்படுவதால் பிற பிராண்டு சிக்கன்களை வாங்குபவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதேபோல் சுமார் 4 தினங்களுக்கு முன் சாதியா சிக்கன் வாங்கியவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை. மேலும் விபரங்களுக்கு 8008889 என்ற இந்த இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கத்தை பெற்றுக் கொள்ளவும்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.