குவைத்தில் பணியாற்றிய வீட்டில் கடுமையாக தாக்கப்பட்ட இலங்கை பெண் உயிரிழந்தார்.வெளிநாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர் கடுமையான தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முள்ளந்தண்டு உடைந்தமையினால் எழுந்து நிற்க முடியாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

நொச்சியாகம, கொக்கெனேவ பகுதியை சேர்ந்த சுஜானி ராஜபக்ச என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் கடந்த ஏழாம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணியாற்றிய வீட்டில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

பெண் மற்றும் ஆண் ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 10 மாதங்கள் எழுந்து நிற்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் கடும் தாக்குதலுக்கு உள்ளான சுஜானி, அநாட்டு வைத்தியசாலையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் அவர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு மாத கால சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.