இந்திய விமான படையில் ஏர்மேனாக பணிபுரிய ஆட்கள் தேர்வு; இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் !இந்திய விமான படையில் பணிபுரிய விருப்பமுள்ள திருமணமாகாத இளைஞர்கள் வருகின்ற 20.05.2017 மற்றும் 22.05.2017 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம் என இந்திய விமான படை தெரிவித்துள்ளது.

இந்திய விமான படையில் ஏர்மேனாக பணிபுரிவதற்கு 20.05.2017 மற்றும் 22.05.2017 ஆகிய தேதிகளில் திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள இளைஞர்கள் 07.07.1997க்கும் 20.12.2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாகவும்,   திருமணம் ஆகாதவர்களாகவும்,  இந்திய பிரஜைகளாகவும்  இருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 12ம் வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஆங்கில பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு வரும்போது 10 மற்றும் 12ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். அசல் மதிப்பெண் சான்றிதழை கல்லூரியில் ஒப்படைத்திருந்தால், கல்லூரி முதல்வரிடமிருந்து அதற்கான சான்றிதழை பெற்று, நகல் மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

20.05.2017 அன்று காலை 6.00 மணி முதல் 10 மணி வரை மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், கரூர் ஆகிய தமிழக மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வு நடைபெறவுள்ளது.

22.05.2017 அன்று காலை 6.00 மணி முதல் 10 மணி வரை வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளுர், திண்டுக்கல், தர்மபுரி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.

மேலும், விவரங்களுக்கு www.airmenselection.gov.in என்ற இணைய தளத்திலும், 044-22390561 மற்றும் 044-22395553 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.