முத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலிமுத்துப்பேட்டை அருகேயுள்ள மங்கலூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன்  கோபிநாத்(20). இவர் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கோபிநாத் நேற்று சித்தப்பா மகன் ஜெயபிரகாஷ் மற்றும் நண்பர்களுடன் அப்பகுதி தோப்புக்கு சென்றனர்.
 அப்பொழுது நுங்கு சாப்பிட ஆசைப்பட்ட கோபிநாத் அங்குள்ள பனைமரத்தில் ஏறி நுங்கு பறித்தார். அப்போது கோபிநாத் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். நண்பர்கள் கோபிநாத்தை தம்பிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கோபிநாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயபிரகாஷ் மயக்கமடைந்தார். இதனால் அவர் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.