புதிய இடத்திற்கு இடம் மாறும் துபாய் தேரா மீன் மார்க்கெட் ! தற்போது வரை இயங்கி வரும் தேரா பிஷ் மார்க்கெட் பல நூற்றாண்டு கால துபை வரலாற்றை தன்னுள்ளே கொண்டு நவீனமயமானது, அறிவிக்கப்படாத சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. ஒவ்வொன்றுக்கும் ஒரு முடிவு உள்ளது என்ற அடிப்படையில் இந்த பாரம்பரியமிக்க தேரா மீன் மார்க்கெட்டும் தனது இறுதி மூச்சை விரைவில் நிறுத்திக் கொள்ளவுள்ளது.

மூடப்படும் இந்த தேரா மீன் மார்க்கெட்டிற்கு பதிலாக 'வாட்டர் பிரண்ட் மார்க்கெட்' (Water Front Market) எனப்படும் புதிய அதிநவீன மார்க்கெட் எதிர்வரும் 2017 ஜூலை 9 ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது. கடலிலிருந்து நேரடியாக பிரஷ் மீன்களை மார்க்கெட்டிற்குள் இறக்கும் வசதியுடன், மார்க்கெட்டிற்கு சொந்தமான ஐஸ் பிளான்ட், நவீன மீன் சுத்தம் செய்யுமிடம், மார்க்கெட் முழுவதும் குளுகுளு வசதி செய்யப்பட்டுள்ளதுடன் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதுடன் அந்த நாற்றங்கள் மார்க்கெட்டை விட்டு வெளிப்புறம் வெளியேறாத வசதியும் செய்யப்பட்டுள்ளனவாம்.

காய்கறி ஸ்டால்கள், மட்டன் சிக்கன் ஸ்டால்கள், உலர்மீன் ஸ்டால்கள், மளிகை கடைகள் என அனைத்தும் நவீன வசதிகளுடன் இங்கும் அணிவகுக்க உள்ளன. தூரம் அதிகமில்லை கொஞ்சம் அருகில் தான் இடம் மாறுகிறது என்பது சற்றே தேரா வாசிகளுக்கு ஆறுதலே.

Source: Emirates 247


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.