ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நம்பிக்கைக்கும் தீ வைத்த நல்லாட்சி .நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிகளின் சுமார் 1000 மில்லியன் ரூபா மதிப்பிலான பொருட்கள்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி காலத்தில் கடைசி இரண்டு வருடங்களில் இனவாதம் சில குழுக்களால் திட்டமிட்டுஅரகேற்றப்பட்டன. மஹிந்த ஆட்சியில் உள்ளே இருந்து சூழ்ச்சி செய்த சூழ்ச்சிகாரர்கள் இப்போது அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் சக்தியாக இருக்கின்றனர்.

அதன் வெளிப்படாகவே இந்த நல்லாட்சியில் இரண்டு வருடங்களில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் 1000 மில்லியன் ரூபாவுக்கும் மேலான இழப்பீட்டை சந்தித்துள்ளது. அலுத்கமை மல்லிகாசில் துவங்கி இன்று மஹரகம வரை வர்த்தகநிலையம் வரை இது தொடர்ந்த வண்ணம் உள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தீ வைக்கப்பட்ட ( அரச ரசாயன பகுப்பாய்வு அறிக்கையும் அவ்வாறேசொல்கிறது ) மல்லிகாஸ் நிறுவனத்துக்கு 70 மில்லியன் பொருள் சேதமும், அதன் பின்னர் பெஷன் பக் நிறுவன தீவைப்பில்  ( அரச ரசாயன பகுப்பாய்வு அறிக்கையும் அவ்வாறே சொல்கிறது ) 300 மில்லியன் பொருட்தேசமும், நிப்போன் பிளாஸ்டிக் நிறுவனத்தில் தீ வைக்கப்பட்ட போது  ( அரச ரசாயன பகுப்பாய்வு அறிக்கையும் அவ்வாறேசொல்கிறது) அங்கு 400 மில்லியன் இழப்பீடும் லாஸ்ட் சான்ஸ் இருதடவைகள் சுமார் 200 மில்லியன் பெருள் சேதமும் , நேற்றும் இன்னும் தீ வைக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் 40
மில்லியன் வரை பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நான் மேலே சுட்டிக் காட்டியது தவிர பொருள் அல்லாத கட்டடம் உள்ளிட்ட அசையா சொத்துக்களின் சேதம் மற்றும் வியாபார இழப்பு மன உளைச்சல் என பல தரப்பட நஷ்டங்களை எமது வர்த்தகர்கள் சந்திதுள்ளனர்.

ஜனாதிபதியின் இணையதளத்தை ஹெக் செய்தவர்களை 72 மணி நேரத்தில் கண்டு பிடித்த இலங்கை புலனாய்வு பிரிவினர் இந்த சம்வங்களில் ஒரு சம்வத்துக்கும் இது வரை குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை.

இனிவரும் காலங்களிலாவது எமது உடமைகளை உரிய பாதுகாப்பை பெற்றுத்தர வேண்டும் என அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் நின்று நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக இபாஸ் நபுஹான்கோரிக்கைவிடுத்துள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.