அதிரையில் பயங்கரம்: அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி பழைய இரும்பு கடைக்குள் புகுந்து விபத்து: ஓட்டுனருக்கு காயம் ! அதிராம்பட்டினத்தில் அரசுப் பேருந்து  - லாரி நேருக்கு நேர் மோதி பழைய இரும்பு கடைக்குள் புகுந்து விபத்து. ஓட்டுனருக்கு காலில் பலத்த காயம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து அரசுப் பேருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிராம்பட்டினம் வழியாக திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை நோக்கி சென்றது. பேருந்து அதிரை வண்டிப்பேட்டை ஐயப்பன் கோவில் அருகே வந்த போது, எதிரே வந்த சரக்கு லாரி மீது நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பழைய இரும்புக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்து ஓட்டுனர் சந்தனராசுக்கு (56 ) காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.