உம்மத்தின் மேம்பாட்டில் அக்கறையுள்ளஅனைவரும் செய்ய வேண்டிய அவசரமான சமூக புனரமைப்புப் பணி12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் அனைவரும் கல்லூரி செல்வதை உறுதி செய்ய வேண்டும். தேர்வில் ஒருசில பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தி அடுத்த மாதம் நடைபெறும் மறுதேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாணவிகள் தவிர்த்து மற்ற மாணவிகளை இஸ்லாமிய படிப்புகள் இணைக்கப்பட்ட பெண்கள் கல்லூரிகளில் மட்டும் சேர்ப்பதற்கு வழிகாட்ட வேண்டும். (விதி விலக்குகள் உண்டு). கணிதம் இயற்பியல் வேதியியல் பாடங்களில் நுணுக்கமான புரிதலுடைய மாணவர்களை மட்டும் பொறியியல் படிக்க தூண்டுவது இல்லையென்றால்
அந்தப் பக்கமே செல்லாமல் பார்த்துக் கொள்வது.

கல்வி என்பது வேலை வாய்ப்பு மற்றும் பணம் சம்பாதிப்பதற்கான கருவி அல்ல அது ஒரு இறைவழிபாடு என்ற சிந்தனையை சமூகத்தில் மிக ஆழமாக விதைப்பது. இந்த ஆண்டு B.A., B.Sc, B.E போன்ற பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களை M.A,M.Sc,M.E போன்ற பட்ட மேற்படிப்பு படிக்கத் தூண்டுவது.
பட்ட மேற்படிப்பு முடிப்பவர்களை கட்டாயம் M.Phil, Ph.D போன்ற ஆய்வுக் கல்வியை தேர்வு செய்ய  தூண்டுவது. முஸ்லிம் ஆண் பிள்ளைகளின் கல்வி காலம் 26 -27வயது என்பதை உம்மத்தின் கலாச்சாரமாக்க வேண்டும்.ஒரு தலைமுறை இதை விடாப்பிடியாக நிறைவேற்றினால் அடுத்த

தலைமுறைக்கு அதுவே வாழ்வியலாகிப் போகும். கல்வி நிதியுதவி செய்யும் அமைப்புகளை பயனுள்ள படிப்பை தேர்வு செய்யும் ஒரு மாணவனின் மொத்த கல்வி செலவையும் பொறுப்பேற்க சொல்ல வேண்டும். இந்திய நாடும் தமிழக சமூகமும் சந்திக்கும் வாழ்வியல் உணவு சுற்றுச்சூழல் மருத்துவம் போன்ற துறை சார்ந்த சிக்கலிற்கு தீர்வுகளை கண்டறியும் படிப்புகளே உம்மத்தின்
பிள்ளைகளுக்கு ஏற்றம் தரும் படிப்புகள் என்பதை உம்மத்திற்கு
விளங்க வைக்க வேண்டும். இந்த செய்தியை படிக்கும்  அனைவரும் குறைந்தது ஒரு மாணவனிடமாவது பகிர்ந்து கொள்ளுங்கள். உம்மத்தின்
சிந்தனைக்கும் தொடர்ந்து  கொண்டு செல்லுங்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.