வரி போட்டே ஆகணும்! தொடர்ந்து வலியுறுத்தும் குவைத் பெண் எம்.பிநீங்க அடங்கவே மாட்டீங்களா எனக் கேட்கணும் போலத் தோணுகிறதா? என்னை சமாளிக்கவே முடியலையா என்று அவங்க கேட்டாலும் கேப்பாங்க! விடுங்க, விடுங்க நடப்பவை நன்மையாக இருக்கட்டும்.

குவைத் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 50 எம்.பிக்களில் ஒரே பெண் எம்.பி ஸபா அல் ஹாஷம் அவர்கள், வெளிநாட்டினர் தங்கள் தாயகத்திற்கு அனுப்பும் பணத்தின் மீது 3 முதல் 5 சதவிகிதம் வரை வரி விதிக்க வேண்டும், இந்த வரி வருமானத்தினால் ஓரளவு குவைத் உள்நாட்டு வர்த்தகமும் பொருளாதாரமும் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த வரி வருவாய் இன்றியே போதிய வருமானம் வருவதாகவும், இதுபோன்ற அநியாய வரிவிதிப்புக்களால் நாட்டில் கள்ளப் பண நடமாட்டமே அதிகரிக்கும் என குவைத் சென்ட்ரல் பேங்கின் கவர்னரும் எம்.பிக்களில் சிலரும் எதிர்கருத்து தெரிவித்துள்ளனர். குடும்பங்களை ஆண்டுக்கணக்கில் பிரிந்திருந்து குவைத் நாட்டின் நலனுக்காக உழைப்பவர்களுக்கு செய்யும் கைமாறு இதுவல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

சென்ட்ரல் பேங்க் கவர்னரின் அறிக்கையை அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ள ஸபா அல் ஹாஷம். வீட்டு டிரைவர்கள், வீட்டுப் பணியாளர்கள் போன்ற அடித்தட்டு தொழிலாளர்களுக்கு 3 சதவிகிதமும் பிறருக்கு 5 சதவிகிதமும் வரி விதிக்கவும் பரிந்துரைத்துள்ளார்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.