மியான்மார் அகதிகளுக்கு உதவ முன் வாருங்கள். முஸ்லீம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் வேண்டுகோள். குடிவரவு குடியேற்ற முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள  மியான்மார் அகதிகளை  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர்  ஷபீக் றஜாப்தீன் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது எதிர்வரும் ரமழான் நோன்பு நோற்பதற்கு குறித்த அகதிகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளார்.

இதற்கமைய தொழுகைக்கான பாய்கள் அத்தியவசியமான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இம்முகாமில்    7பெண்களும் 7 ஆண்களும்   16 குழந்தைகள்  சிறுவர்களும்  உள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டதன் பின்னர் இரண்டு நாள் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்து  மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் படி குறித்த முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தனர்.

அத்துடன் இங்குள்ள குழந்தைகள்  பெண்களுக்கு  துணிகள் நுளம்பு வலைகள் பால் மா என்பன தேவையாக உள்ளது.

இதனை உதவியாக வழங்க விருப்பவர்கள்   தனது தொலைபேசி இலக்கத்துடன் ( 0773910090 )தொடர்பு கொள்ளுமாறும்  அல்லது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 53 கிவ் லேன்  கொழும்பு -02 என்ற முகவரியுடன்  தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் கேட்டுள்ளார்.

-பாறுக் ஷிஹான்-Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.