காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை துவக்கம் !தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 2017 - 2018 ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 28.04.2017 முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மாணவ, மாணவிகள் புதிய சேர்க்கை இன்று மே 22 ந் தேதி திங்கட்கிழமை முதல் தொடங்கியது. கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமையில், கல்லூரிப் பேராசிரியர்கள் சிலார் முகமது, சந்திரசேகர், முருகானந்தம், ஓ. சாதிக் ஆகியோர் கல்லூரியின் பாரம்பரியம், சிறப்பு அம்சங்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கம், பண்பு ஆகியவற்றை எடுத்துரைத்து சேர்க்கையை நடத்தினர். இதில் இளங்கலை பாடப்பிரிவு தேர்ந்தெடுத்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.