எடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சிமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழப்பெருமழை கிராமம் பாப்பன் கோட்டம் தெருவை சேர்ந்த உத்திராபதி-பத்மாவதி தம்பதினர் மகள் உஷாநந்தினி (20). இவர் தஞ்சை மாவட்டம், தாமரங்கோட்டையில்  உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வருகிறார்.

மாணவி உஷாநந்தினி தேர்வு முடிந்து கல்லூரி விடுமுறை விடப்பட்டதையத்து கடந்த 28ம் தேதி கீழபெருமழைக்கு வந்துள்ளார். இந்நிலையில் மறுநாள் கடந்த 29ம் தேதி அதிகாலை 5 மணியளவில் வீட்டில் இருந்த மாணவி உஷாநந்தினியை  காணவில்லை. இதனால் அதர்ச்சி அடைந்த பெற்றோர்  பல இடங்களில் மாணவி உஷாநந்தினியை  தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அங்கம்பக்கத்தில் விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த தாமரை செல்வன் மகன் கணேசன், மணியன் மகன் குணதாசன் மற்றும்  குணதாசன் மனைவி பாஞ்சாலி ஆகியோர் மாணவி உஷாராணியை கடத்தியதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மாணவி உஷாநந்தினியின் பெற்றோர் உத்திராபதி அவரது மனைவி பத்மாவதி ஆகியோர் கடந்த 29ம்தேதி எடையூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஆனால்  வழக்குப்பதிவு செய்யப்படவில்லை, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மாணவி உஷாநந்தினியின் பெற்றோர் உத்திராபதி, பத்மாவதி மற்றும் உறவினர்கள் சிலர் மனமுடைந்து நேற்று எடையூர் காவல்நிலையத்திற்கு வந்த அவர்கள் திடீரென்று  கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெயை  உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு போலீ்சாரை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு  தீ வைத்துக்கொள்ள முயன்றனர்.

இதனை கண்ட எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் தண்ணீரை அவர்களின் மேல் ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர். மேலும் அவர்களிடம் விரைவில் உரிய நடடிவக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து மாணவி உஷாநந்தினி காணாமல் போனது குறித்து எடையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.