துபாயில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்கு சைக்கிள் போலீஸ் படை அறிமுகம் !துபையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவசர உதவிகளை விரைந்து வழங்கவும் 14 பேர் கொண்ட நவீன சாதனங்களுடன் கூடிய சைக்கிள் ரோந்து போலீஸ் படை (1st Batch)  உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பமாக, ஜூமைரா பீச், துபை கேனல், புரூஜ் அல் அரப், கைட் பீச் மற்றும் ஜேபிஆர் ஆகிய பகுதிகளின் ஒவ்வொரு சந்து பொந்துகளிலும், கடற்கரைகளிலும் ரோந்து சுற்றி வருவர்.

சைக்கிள் ரோந்து போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ள சிறப்பு ஹெல்மேட்டின் வழியாக குரல் மற்றும் வீடியோ பதிவுகளை போலீஸ் ஆப்பிற்கு பரிமாற்றம் செய்ய முடியும் மேலும் நேரலை செய்யப்படும் வீடியோ பதிவுகளை கொண்டு அவர்களது மேலதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பார்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.