மின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....? தெரியுமாவயல்பகுதிகளில் மின்மினிப்பூச்சிகள் சுற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். சிறுவெளிச்சம் இப்பூச்சியில் இருந்து வெளிப்படுவதால் மின்மினி என்று பெயர் பெற்றது. இதற்குள் வெளிச்சம் எவ்வாறு உருவாகிறது. பொதுவாக ஒருபொருள் ஒளிவிடும்போது அதில் இருந்து பெரும்பாலும் வெப்பமே வரும். அதாவது ஒருமின்விளக்கில் 90சதவீதம் வெப்பமும் 10சதவீதம் ஒளிமட்டுமே வரும். அப்படி என்றால் இந்த சிறிய பூச்சி வெந்துகருகிவிடாதா என்று தோன்றும். ஆனால் மின்மினிப்பூச்சியின் உடலில் உருவாகும் ஒளி குளிர்ஒளி, உயர்ஒளி என்றே அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இதன் வயிற்றில் உள்ள ஒளியைத்தரும் சிறப்புச் செல்களே.

இவை முழுக்க முழுக்க ஒளியை மட்டுமே தரும். சிறிதுகூட வெப்பம் தருவதில்லை. அதாவது இதன் ஒளியில் 100சதவீதம் ஒளி மட்டுமே வரும் வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கும் குறைவே. இந்த சிறப்பு செல்களில் லாசிபெரின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது பூச்சியின் உடலுக்குள் வரும் காற்றுக்குழாய்களில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது. பின் லூசிபெரிலின் என்ற பொருளாக மாறுகிறது. அப்போது ஒளியையும் வெளிப்படுத்துகிறது இந்த மின்மினியின் வயிற்று செல்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.