முத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து! (படங்கள் இணைப்பு)முத்துப்பேட்டையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில் இவர்கள் முத்துப்பேட்டை  அடுத்துள்ள தம்பிக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் சென்றுகொண்டிருக்கும் எதிரே வேகமாக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இதனால் அந்த லாரியின் மீது மோதாமல் இருக்க இவர்கள் காரை வேகமாக திருப்பியுள்ளனர். இதில் கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருவரும் காயங்களுடன் உயர்தப்பினர். அவர்கள் தற்போது தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது.

இந்த விபத்து குறித்து அதிரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.