துபாய் போலீஸ் எச்சரிக்கை ! புனிதமிகு ரமலானை பயன்படுத்தி நன்கொடை கோரும் போலி செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பாதீர்புனிதமிகு ரமலானில் ஏகன் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தவர்களாக உலக முஸ்லீம்கள் இன்னும் அதிகமதிகம் தான தர்மங்களை வழங்கி மகிழ்வர். முஸ்லீம்களிடம் சுரக்கும் இந்த இரக்க சிந்தனையை சில இழிபிறவிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். இத்தகையவர்களின் காசு பறிக்கும் கொடூர விளையாட்டு ரமலானுக்கு முன்பே துவங்கிவிட்டது குறித்து துபை போலீஸாரின் கவனத்திற்கு வந்துள்ளதால் அது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

கடன் மற்றும் இதர பொருளாதார குற்றங்களின் காரணமாக பலர் துபை சிறையிலுள்ளனர். அத்தகையர்களின் குடும்பங்களை சிறை மீட்க உதவுவதாக கூறி அணுகும் குற்றவாளிகள், சிறையிலுள்ளவர்களின் பாஸ்போர்ட், போட்டோ, நீதிமன்றத் தீர்ப்பு உட்பட அனைத்து விபரங்களையும் குடும்பத்தினரை ஏமாற்றிப் பெற்று சமூக வலைத்தளங்களில் உதவி கோரி பதிவேற்றம் செய்கின்றனர் ஆனால் அவர்கள் வசூலிக்கும் எந்தக் காசும் சிறைவாசிகளின் விடுதலைக்காக பயன்படுத்தப் படுவதில்லை. இதையறியாத பொதுமக்கள் இந்த போலிச் செய்திகளை உண்மையென நம்பி பிற நண்பர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் பார்வேர்டு செய்கின்றனர்.

எனவே, இத்தகைய செய்திகளை டிவிட்டர், பேஸ்புக் போன்ற பல சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தாலோ அல்லது பிறரின் செய்திகளை பார்வேர்டு செய்தாலோ தண்டிக்கப்படுவீர்கள் என துபை போலீஸ் எச்சரித்துள்ளது. உதவி செய்ய விரும்புவோர் துபை அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் மட்டுமே தங்களின் உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Source: Khaleej Times / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.