"ஏர்" இந்தியாவை கூடிய விரைவில் விற்றுவிடுவோம்...அருண்ஜெட்லிநாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தை தற்போது தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
.
தொடர்பாக குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,'' சரியான முதலீட்டாளரை எதிர்பார்த்து உள்ளோம். அப்படி ஒரு நபர் கிடைத்தால், ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து மத்திய அரசு உடனே வெளியேறும்,'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், " விமான போக்குவரத்து சந்தையில், 84% தனியார் நிறுவனங்களால் கையாளப்படுகிறது. எனவே, 100% தனியாரிடமும் செல்வதில் எந்த தவறும் இல்லை. விமான போக்குவரத்தில் ஏர் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் குறைவுதான்.

ஆனால், அந்த நிறுவனத்தின் கடன் சுமை 2016ம் ஆண்டு டிசம்பர் வரை , 50 ஆயிரம் கோடி ரூபாய். உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை, 14.1% என்ற விகிதத்தில் குறைந்துள்ளது. இதில், இண்டிகோ நிறுவனம் பங்களிப்பு, 39.8% ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்களிப்பு, 15.5% மட்டுமே. " என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.