முத்துப்பேட்டையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை நீர் தொற்றுநோய் பரவும் அபாயம்முத்துப்பேட்டையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் எதிர்புறம் செல்லும் ரஹ்மத் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் நீண்ட வருடங்களாக கழிவு நீர் வடிகால் அமைக்கபடாமல் உள்ளது. இதனால் சாக்கடைநீர் சாலையில் நடுவே ஓடி சுத்தமாக காட்சியளிக்கிறது.

இதனால் இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி தொற்று நோய்களும் பரவி வந்தது. கடந்த இரு தினங்களாக சாக்கடைநீர் ஆறுகள் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. புதிய பேருந்து நிலையம் திருத்துறைப்பூண்டி சாலை மெயின் ரோடு வரை சாக்கடைநீர் ஆறு போல் ஓடுகிறது. இதனால் சாலை முழுவதும் தூர்நாற்றம் வீசி அசுத்தமாக காட்சி அளிக்கிறது. அப்பகுதியில் மக்கள் நடக்க முடியவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள்  பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.