அதிரையில் பெண்களுக்கான மார்பக நோய் கண்டறிதல் சிறப்பு முகாம்: முன்பதிவு செய்ய அழைப்பு !தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், திருச்சி டாக்டர் கே. சாந்தா மார்பக நோய் அறக்கட்டளை, டாக்டர் ஜி. விசுவநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்தும் பெண்களுக்கான மார்பக நோய் கண்டறிதல் சிறப்பு முகாம் எதிர்வரும் 18-05-2017 வியாழக்கிழமை அன்று காலை 9 மணியளவில் அதிராம்பட்டினம் தீன் டயக்னாஸ்டிக் சென்டரில் ( மாஜிதா ஜுவல்லரி அருகில் ) நடைபெற உள்ளது.

இம்முகாமில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 35 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சலுகை கட்டணத்தில் பரிசோதனை செய்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:
1. இம்முகாமில் ரூ.3500 மதிப்பிலான மேமோகிராம் பரிசோதனை ரூ.600 சிறப்புக் கட்டணம் மட்டுமே.
2. முகாம் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.
3.  35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே முகாமில் பரிசோதனை செய்ய அனுமதி.

குறிப்பு: 50 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே முகாமில் அனுமதிக்கப்படும்.

முன்பதிவு தொடர்புக்கு
பிஸ்மி மெடிக்கல்ஸ் 9894946538
சேயண்ணா மெடிக்கல்ஸ் 9597411597
தீன் மெடிக்கல்ஸ் 8098342268

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.