முஹம்மது சப்னி மரணம்... காத்தான்குடியில் மூன்று இளைஞர்கள் கைது.ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணித்தை அடுத்து அவருடன் பயணம் செய்து விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்களான மேற்படி நான்கு இளைஞர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் ஏட்டுக்குப்போட்டியாக சைக்கிளை செலுத்தி சென்றபோது விபத்துக்குள்ளாயினர். இதில் படுகாயமடைந்த நிலையில் நால்வரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் புதிய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த முஹம்மது சப்னி (வயது-17) என்பவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தொடர்ந்து குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் புதிய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த முஹம்மத் சபான் (வயது-17), முஹம்மத் றிழ்வான் (வயது-17), முஹம்மத் பஸ்கான் (வயது-18) ஆகிய மூன்று இளைஞர்களுமே கைது செய்யப்பட்டவர்களாவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.