அபுதாபி லைசென்ஸ் உள்ள வாகன ஓட்டிகளுக்கு குறுகியகால சலுகை அறிவிப்பு !அமீரகம் 2017 ஆம் ஆண்டை 'வழங்கி மகிழும் ஆண்டாக' (Year of Giving) கடைபிடித்து வருவதன் ஒரு பகுதியாக குறுகியகால சலுகை ஒன்றை அபுதாபி போக்குவரத்து போலீஸ் துறை அறிவித்துள்ளது.

சின்னச்சின்ன குற்றங்களுக்காக உங்களுடைய லைசென்ஸ் மீது கரும்புள்ளிகளை பெற்றுள்ளீர்களா? புதிய போக்குவரத்து அபராத சட்டங்கள் அமலாகவுள்ள ஜூலை 1 ஆம் தேதிக்கு முன் அபுதாபி போலீஸ் முன் ஆஜராகி அவற்றை முழுமையாக நீக்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய போக்குவரத்து குற்றங்களை செய்தோர் இந்த சலுகையை பெற முடியாது, ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு இந்த சலுகை நீடிக்காது மேலும் ஜூலை 1 முதல் புதிய போக்குவரத்து விதிகளின்படி அதிக கரும்புள்ளி கட்டாயம் உண்டு.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.